பொதுமக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் சுங்கச்சாவடிகள்: வேல்முருகன் ஆவேசம்

வேல்முருகன்
வேல்முருகன்பொதுமக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் சுங்கச்சாவடிகள்:வேல்முருகன் ஆவேசம்

சுங்கவரி என்ற பெயரில் பொதுமக்களின் பணத்தை இரவுபகலாகக் கொள்ளையடித்து வருகின்றனர்; தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’ சுஙகக்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். உடனடியாக மாநில அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டுமெனத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறேன். என்னுடைய கோரிக்கையை ஏற்று மூன்று சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன.

மாநில அரசின் விதிகளுக்கு எதிராக இயங்கும் 14 சுங்கச்சாவடிகளை அகற்றப்பட வேண்டும். இரவு, பகலாகக் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் இந்த சுங்கச்சாவடிகளை அடியோடு அகற்ற வேண்டும்.

சுங்கச்சாவடி கட்டணங்களை ஒரே தவணையாகச் செலுத்தி விடுகிறோம் என சரக்குந்து உரிமையாளர்கள் தெரிவித்து வரும் நிலையில், அதனை ஏற்றுத் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகள் அனைத்தையும் அடியோடு அகற்ற வேண்டும்.  அதற்குத்  தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் இல்லையென்றால் அதற்கான நாளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி குறிக்கும். சுங்கச்சாவடி கட்டணங்களைத் தர மறுத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டங்களை முன்னெடுக்கும்.  சட்டத்திற்குப் புறம்பாக இருக்கும் 14 சுங்கச்சாவடிகளை மக்களும் புறக்கணித்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். வாகன ஓட்டிகள் சுங்கக்கட்டணத்தை செலுத்தக் கூடாது’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in