இன்று காலை சென்னையில் கூடுகிறது திமுக எம்.பிக்கள் கூட்டம்!

சென்னை அண்ணா அறிவாலயம்
சென்னை அண்ணா அறிவாலயம்

செப்டம்பர் 18ம் தேதி, முதல் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்.பிக்கள் கூட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்பு கூட்டத்தொடர் 5 அமர்வுகளாக நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி முதல் 22 ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், கூட்டத்தொடரின் அஜெண்டா குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

’ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான மசோதாவை மத்திய அரசு கொண்டு வரலாம் எனக் கூறப்படும் நிலையில், இதற்கு 'இந்தியா' கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

முதல்வர் மு.க ஸ்டாலினும் ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் அதிபர் ஆட்சியை கொண்டு வர முயற்சிக்கிறார்கள் என காட்டமாக பேசியிருந்தார். இந்நிலையில், இன்று காலை திமுக எம்.பிக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருந்த அறிவிப்பில், ’’திமுக நாடாளுமன்ற உறப்பினர்கள் கூட்டம் செப்.16ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in