அமைச்சர் நேரு தம்பி ராமஜெயம் நினைவு நாள்... 12 ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம்!

கே.என். ராமஜெயம்
கே.என். ராமஜெயம்

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்தின்  பன்னிரெண்டாவது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப் படுகிறது. இதுவரையிலும் ராமஜெயத்தின் கொலைக்கான காரணமும், கொலையாளிகள் யார்  என்பதும் புரியாத புதிராகவே நீடித்து வருகிறது.

திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேருவின் தம்பியான தொழிலதிபர் ராமஜெயம், கடந்த 2012 மார்ச் 29 -ம் தேதி அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.  

திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் ராமஜெயத்தின் மனைவி லதா கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை தனது விசாரணையை தொடங்கியது. அதன் பின்னர் பல்வேறு அமைப்புகளின் கீழ் இந்த வழக்கின் விசாரணை மாற்றப்பட்டாலும்  கொலை நடந்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இதுவரை கே.என்.ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

ராமஜெயம் சிலைக்கு மரியாதை செலுத்தும் அமைச்சர் நேரு, அருண் நேரு
ராமஜெயம் சிலைக்கு மரியாதை செலுத்தும் அமைச்சர் நேரு, அருண் நேரு

தற்போது ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவின் எஸ்பி-யாக ஜெயக்குமார் இருக்கிறார். டிஎஸ்பி-க்கள் ஜெயச்சந்திரன், மதன், செந்தில்குமார், இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேலு, ஞானவேலன், செந்தில்குமார், குமார் மற்றும் 20 போலீஸார் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.   

இந்த விசாரணையில் தமிழகத்தின் பிரபல கொள்ளை, கொலை சம்பவங்களில் தொடர்புடைய 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இருந்தாலும் இதுவரை எந்த முன்னேற்றமும் இருப்பதாக சிறப்பு புலனாய் குழு வெளியில் தெரிவிக்கவில்லை. இதோ ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது. அடுத்த மாமாங்கத்துக்குள்ளாவது இந்த வழக்கில் உண்மை வெளிவருமா என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.   

இந்தநிலையில்,  ராமஜெயத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான கேர் பொறியியல் கல்லூரியில் ராமஜெயம் திருவுருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு, மாநகர மேயர் அன்பழகன், பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு உள்ளிட்ட திருச்சி திமுகவின் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதையும் வாசிக்கலாமே...    

வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!

தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 45 பேர் பலியான பரிதாபம்!

அதிர்ச்சி... சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பள்ளி இறுதித்தேர்வு தேதியில் திடீர் மாற்றம்... ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடவடிக்கை!

அடுத்த தோனி இவர் தான்... தோனியே புகழ்ந்த அந்த நபர் இவரா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in