குட்நியூஸ்... மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தளர்வுகள் அறிவிப்பு.. என்னென்ன தெரியுமா?

உரிமைத் தொகை விண்ணப்பங்களுடன் மகளிர்.
உரிமைத் தொகை விண்ணப்பங்களுடன் மகளிர்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில் தற்போது அவற்றில் சில தளர்வுகள் அறிவித்துள்ளது.

மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம்
மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம்

பெண்கள் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை பெறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதி வாய்ந்த பயனாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் சில நிபந்தனைகள் வகுத்து வெளியிடப்பட்டன. தற்போது அவற்றில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளதால் ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பயன்பெற வாய்ப்பு உருவாகியுள்ளது.

செப்டம்பர் 15-ம் தேதி மகளிர் உரிமைத் தொகை திட்டம் காஞ்சிபுரத்தில் தொடங்க உள்ளது. அன்றைய தினமே தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பயனாளர்களின் வங்கி கணக்குக்கும் 1000 ரூபாய் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற மகளிர் உரிமைத் தொகை முகாம்களில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கான இன்று முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

மகளிருடன் முதல்வர் ஸ்டாலின்.
மகளிருடன் முதல்வர் ஸ்டாலின்.

முதியோர் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசு ஓய்வூதியம் வழங்கும் போது, அரசு அறிவித்துள்ள பொருளாதாரத் தகுதிக்குள் வந்தும், தங்களது குடும்பத்தில் ஒருவர் முதியோர் ஓய்வூதியம் பெறுகிறார் என்பதற்காக மகளிர் உரிமைத் தொகை பெற முடியாது என்று கூறுவது சரியல்ல என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தமிழக அரசு இது தொடர்பான கோரிக்கைகளை ஏற்று தளர்வுகளை அறிவித்துள்ளது.

வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள பெண்களும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in