
பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதுவோரில் ஏற்கெனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டில் இருந்து டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பலரும், தங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும், பணிகளில் சேர முடியாத நிலை இருப்பதாக தெரிவித்திருந்தனர். சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் இவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கெனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்று பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கைகளில் ஒன்றாகும். கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஏற்கெனவே இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது மீண்டும் அவர்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது.
இந்த தேர்வில் தமிழில் தேர்ச்சி பெறவேண்டியது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதுவோரில் ஏற்கெனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2012 டெட் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 5.5 மதிப்பெண்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படும்.
2013-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 5 மதிப்பெண்ணும், 2014-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 4.5 மதிப்பெண்ணும் வழங்கப்படும். 2017-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3 மதிப்பெண்கள் வழங்கப்படும். 2019 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2 மதிப்பெண் வழங்கப்படும். 2022-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 0.5 வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வங்கிகளுக்கு பறந்த புதிய உத்தரவு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக உள்ளார்- அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!
யாரை ஏமாற்ற கூட்டம் நடத்துகிறீர்கள்?- ராமதாசுக்கு காடுவெட்டி குரு மகள் கேள்வி!
33 வருடம்... என் இதயம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது! அமிதாப்புடன் நடிக்கும் ரஜினி நெகிழ்ச்சி!