சீமான்- செந்தில் பாலாஜி இடையே ட்விட்டர் `வார்': கலாய்க்கும் நெட்டிசன்கள்

சீமான்- செந்தில் பாலாஜி இடையே ட்விட்டர் `வார்': கலாய்க்கும் நெட்டிசன்கள்

மின்தடை தொடர்பாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே ட்விட்டர் வார் நடந்து வருகிறது.

தமிழகத்தில் அண்மையில் மின் தடை ஏற்பட்டு வருகிறது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இந்த மின்தடை ஏற்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிவருகிறார். இதேபோன்று, இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி மனைவி, மின் தடை தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். நாடு முழுவதும் மத்திய அரசால் பல மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருவதால் மின் தடை ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏப்பா சீமான்.. இந்த ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனையை டிவில போடுறாங்கலாம்.. அது என்னனு பார்க்கலாம்னு பாத்தா எழவு கரண்ட் இல்லப்பா.. அது தான் பெரியம்மா திராவிட மாடல்..!" என்று கிண்டல் செய்திருந்தார்.

இந்த ட்வீட்டை ரீ-ட்வீட் செய்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ``கடும் கோடையிலும் உச்சபட்ச மின் தேவை இருந்த போதும் தமிழ்நாடு மின் வாரியம் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. அண்ணன் சமீபத்தில் குடியேறி இருக்கும் கடற்கரையோர சொகுசு பங்களாவின் மின் இணைப்பு எண்ணைக் கொடுத்தால் அங்கு 'உண்மையிலேயே’ மின் வெட்டு இருந்ததா என்பதை விசாரித்துச் சொல்கிறேன்" என்று பதில் அளித்துள்ளார்.

சீமான் அளித்த பதிலில், மின்சாரத்துறை அமைச்சர் அன்புத்தம்பி செந்தில் பாலாஜி அவர்களுக்கு!. அண்ணனின் கடற்கரையோர வாடகை சொகுசு பங்களாவில் நீங்கள் வந்து குடியிருங்கள். நீங்கள் ரொம்பநாளா குடியிருக்கிற 'குடிசையில' அண்ணன் தங்கிக்கொள்ள தயவுசெய்து அனுமதி கொடுங்கள்! என்று விமர்சித்திருந்தார்.

சீமானின் இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி, "குடிசையோ- மாளிகையோ அரசாங்க இல்லத்தில் தங்குவதற்கு, மக்கள் வாக்களித்து சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டுமே!. விரும்பினால், கரூர் வீட்டில் விருந்தினராக தங்க எங்கள் அன்பு உண்டு. அதுசரி, சொகுசு பங்களாவில் மின்தடை ஏற்பட்டதாகச் சொன்னீர்கள். வீட்டின் மின் இணைப்பு எண்ணைக் கேட்டிருந்தேன்!" என்று கூறியிருந்தார். மின்வெட்டு தொடர்பாக சீமான்- செந்தில் பாலாஜி இடையே நடக்கும் ட்விட்டர் வாரில் நெட்டிசன்களும் உள்ளே புகுந்து கலாய்த்து வருகின்றனர்.

Related Stories

No stories found.