
அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிணற்றில் குதி்த்து ஆனந்த குளியல் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக அமைச்சர்களில் மிகவும் துடிப்பான உடல் கட்டமைப்பு கொண்ட அமைச்சராக வலம் வருபவர் மா.சுப்பிரமணியம். தினந்தோறும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வதில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். மேலும் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டாலும் தன் உடற்பயிற்சி, நடைப்பயிற்சியை நிறுத்தாமல் அதனை கடைப்பிடித்து வரும் ஒரே அமைச்சர் மா.சுப்பிரமணியன் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
அதோடு மாரத்தான் போட்டியில் பங்கேற்று பல பரிசுகளையும் தட்டிச் சென்றிருக்கிறார். அண்மையில் நடைப்பயிற்சி செய்வது குறித்தும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம் அளித்திருந்தார். "தற்போது மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. இதனை தடுக்க உடற்பயிற்சியும், நடைப்பயிற்சியும் மிகவும் முக்கியம்" என்று அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், கிராமத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அங்குள்ள கிணற்றில் குறித்து ஆனந்த குளியல் போட்டுள்ளார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமைச்சர் மா. சுப்பிரமணியன், "தினந்தோறும் குளியலறையில் 2 குடம் தண்ணீரில் குளிக்கும் வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்டு இன்று காலை மகிழ்ச்சிகரமான கிராம குளியல்" என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.