பழவேற்காடு ஏரி முகத்துவாரம் தூர்வாரல்... ரூ.26.85 கோடி பணிக்கு தமிழ்நாடு அரசு நிர்வாக ஒப்புதல்

பழவேற்காடு ஏரி
பழவேற்காடு ஏரி

பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வார ரூ.26.85 கோடியில் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்காலம் முடியும்போது, திருவள்ளூரில் உள்ள பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தில் மணல்மேடு ஏற்படுவது வழக்கம். இதனால் கடலுக்கு செல்ல முடியாமல் மீனவர்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதற்கு தீர்வாக ஏரியின் முகத்துவாரத்தை தூர்வாரி அலைதடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு வந்தது.

பழவேற்காடு ஏரி முகத்துவாரம் தூர்வாரும் பணி
பழவேற்காடு ஏரி முகத்துவாரம் தூர்வாரும் பணி

இதையடுத்து ரூ.26.85 கோடி ரூபாயில் பழவேற்காடு ஏரி முகத்துவாரம் தூர்வாரி அலைதடுப்பு சுவர்கள் அமைத்து நிலைப்படுத்தப்படும் பணியை மேற்கொள்வதற்கு நிர்வாக ஒப்புதல் ஆணை வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை அமைச்சகம் மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில், தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. அந்த அனுமதியும் கிடைத்தவுடன் தூர்வாரும் பணிகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்!

பரபரப்பு… காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்!

கணவர் மிரட்டுகிறார்... காவல்துறையில் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா புகார்!

பத்து தொகுதிகள்... பலிக்குமா பாஜக போடும் கணக்கு?

ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in