15 ஆண்டுகளுக்கு மேலான அரசு பேருந்துகள், அரசு வாகனங்களின் பதிவு செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் அனைத்து அரசு துறைகளிலும், 15 ஆண்டுகள் கடந்து பயன்பாட்டில் உள்ள வாகன விவரங்களை சமர்ப்பிக்குமாறு அலுவலர்களிடம் போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தியிருந்தார்.
இதில் 10,730 வாகனங்கள் இருப்பது தெரியவந்தது. இதில் அரசுப்பேருந்துகள், தீயணைப்பு வாகனங்கள், சுகாதாரத்துறை வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்டவை அடங்கும்.
இதில் 5,739 வாகனங்களை முதல்கட்டமாக பயன்படுத்த தடை விதிக்க அரசு முடிவு செய்தது. இருப்பினும், பொது சுகாதாரத்துறை மற்றும் பொது போக்குவரத்துறை உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் ஒரே கட்டமாக ஆயிரக்கணக்கான வாகனங்களை முடக்கினால், அது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 6341 அத்தியாவசிய வாகனங்களின் பதிவை வருகிற 2024 டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
2024 டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு இந்த வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு, ஸ்கிராப் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
சனாதனம் குறித்து நான் பேசியது தவறில்லை... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
நடிகை ராஷ்மிகாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ... கொந்தளித்த அமிதாப் பச்சன்!
விஜய் நிச்சயமா அரசியலுக்கு வருவார்! அடித்துச் சொல்லும் சீமான்
புது வாக்காளர்களாக 4 லட்சம் பேர் விண்ணப்பம்! தேர்தல் ஆணையம் தகவல்