
பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் டிசம்பர் 16-ம் தேதிக்குப் பின் தமிழ்நாட்டில் இயங்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு அடுத்தபடியாக தனியார் ஆம்னி பேருந்துகள் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. சுமார் 5,000-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட 652 ஆம்னி பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்குவதால், போக்குவரத்து துறைக்கு ரூ.28.16 கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
கடந்த ஆயுத பூஜை பண்டிகையின் போது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை போக்குவரத்து துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். இதையடுத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், தமிழ்நாடு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 2 மாத காலத்திற்குள் பிற மாநில பதிவெண் கொண்ட அனைத்து ஆம்னி பேருந்துகளையும் தமிழ்நாடு பதிவிற்கு மாற்ற ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில் வருகிற டிசம்பர் 16-ம் தேதிக்கு பிறகு வெளிமாநில ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயங்க அனுமதிக்கப்பட மாட்டாது என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. அதன் பிறகும் வெளிமாநில பதிவெண்களுடன் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ள தமிழ்நாடு அரசு, பண்டிகை காலங்களின் போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளும் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
சனாதனம் குறித்து நான் பேசியது தவறில்லை... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
நடிகை ராஷ்மிகாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ... கொந்தளித்த அமிதாப் பச்சன்!
விஜய் நிச்சயமா அரசியலுக்கு வருவார்! அடித்துச் சொல்லும் சீமான்
புது வாக்காளர்களாக 4 லட்சம் பேர் விண்ணப்பம்! தேர்தல் ஆணையம் தகவல்