இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மாற்றம்! தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

பிஎட் படித்திருந்தால் இனி இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியாது என தமிழக பள்ளி கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 2 ஆண்டு கால அளவிலான இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கான பட்டய கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழக தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் இடைநிலை ஆசிரியர் என்று அழைக்கப்படுகின்றனர். உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை இந்த இடைநிலை ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மாற்றம்
இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மாற்றம்

இந்த பணிக்கு இதுவரை பிஎட் படித்து இருந்தவர்களும் விண்ணப்பித்து வந்தனர். ஆனால் தற்போது தமிழக அரசு இதில் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதன்படி பிஎட் படித்தவர்கள் இனி இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியாது. இது தொடர்பாக அரசிதழில் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசிதழில் வெளியிட்ட தமிழ்நாடு அரசு
அரசிதழில் வெளியிட்ட தமிழ்நாடு அரசு

ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என அந்த அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் 1,000 இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கான போட்டி தேர்வு அறிவிக்கப்பட உள்ள நிலையில், புதிய விதிமுறைகளை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in