`வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது'- ஆளுநரை சாடும் டி.டி.வி.தினகரன்

`வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது'- ஆளுநரை சாடும் டி.டி.வி.தினகரன்

"ஆளுநரின் செயல்பாடு ஜனநாயகத்திற்கு விரோதமாக உள்ளது. வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது" என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டினார்.

அதிமுக நிறுவனத்தலைவர் எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரத்தில் எம்ஜிஆர் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், ``அதிமுகவில் ஏற்பட்ட பதவி சண்டை தற்போது  நீதிமன்ற வரை சென்றுள்ளது அது குறித்து பேசுவது எந்தவிதமான பயனும் இல்லை.

திமுக ஆட்சி அமைந்து ஒன்றை வருட காலம் ஆகிறது. ஆனால் தற்போது தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இந்த வருட இறுதிக்குள் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் ஓர் அணியில் திரள வேண்டும்.

ஜனநாயகத்திற்கு எதிராக அரசியல் பேசி தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். ஆளுநரின் செயல்பாடு ஜனநாயகத்திற்கு விரோதமாக உள்ளது. வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது'' என விமர்சனம் செய்தார்.

மத்திய அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படும் விதமாக ஆளுநர் ரவி நடந்து கொள்கிறார். அமைதி பூங்காவன தமிழகத்தில் குழப்பத்தை விளைவிப்பதே ஆளுநரின் நோக்கமாக உள்ளது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதிமுகவை மீட்டு எடுப்போம் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in