தமிழக அரசுக்கு புதிய நெருக்கடியா? தலைமைச் செயலாளரை அழைத்து ஆளுநர் அவசர ஆலோசனை

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை அழைத்து ஆளுநர் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ள சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், ஆளும் திமுக அரசுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது. அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாக புகார் தெரிவித்து, தமிழ்நாடு அரசு ஆளுநர் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

மேலும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஆளுநர், திராவிடம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருவதாக தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன .

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா

இந்நிலையில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு அழைத்து ஆளுநர் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலவரம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்த சந்திப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

ஆளுநர் மாளிகை மீது ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், ஆளுநர் மாளிகை கூறிய குற்றச்சாட்டுகளுக்கு, தமிழ்நாடு காவல்துறை ஆதாரங்களுடன் விளக்கம் தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கிண்டி ஆளுநர் மாளிகை
கிண்டி ஆளுநர் மாளிகை

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in