தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிடமாற்றம்... அதிரடி உத்தரவு!

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழ்நாட்டில் 5 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களில் 2 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்த உத்தரவில், “பொள்ளாச்சி ஏ.எஸ்.பி., ஆக இருந்த பிருந்தாவுக்கு எஸ்.பி-ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, சேலம் வடக்கு துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஈரோடு சத்தியமங்கலம் ஏ.எஸ்.பி., அய்மன் ஜமாலுக்கு எஸ்.பி-ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, ஆவடி சட்டம் ஒழுங்கு துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சேலம் வடக்கு துணை காவல் ஆணையர் கவுதம் கோயல், தாம்பரம் சட்டம் ஒழுங்கு துணை காவல் ஆணையராகவும், ஆவடி சட்டம் ஒழுங்கு துணை காவல் ஆணையர் பாஸ்கரன், மதுரை, தமிழக சிறப்பு போலீஸ் 6வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆகவும், சென்னை, ரயில்வே எஸ்.பி-ஆக சுகுணா சிங்கும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.” இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in