செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளை காங்கிரஸ் புறக்கணிக்கும்: காரணங்களை அடுக்கும் செல்வப் பெருந்தகை!

செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளை காங்கிரஸ் புறக்கணிக்கும்: காரணங்களை அடுக்கும் செல்வப் பெருந்தகை!

பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளைப் புறக்கணிப்பு செய்வதாகத் தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்பதற்காக 187 நாடுகளிலிருந்து 2000-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் சென்னைக்கு வந்திருக்கிறார்கள்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை நடைபெறும் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்கிறார். அந்த விழாவில் ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணிப்பதாகக் காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப் பெருந்தகை கூறுகையி,ல, “விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, பாதுகாப்பு அச்சுறுத்தல், ஆபத்தான அக்னிபத் திட்டம், கூட்டாட்சி தத்துவத்தை சிதைப்பது, தன்னாட்சி பெற்ற அமலாக்கத்துறை, வருமானவரித்துறையை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவது, தமிழகம் ஏற்காத நீட்தேட்வை திணிப்பது, தமிழக ஆளுநரை தமிழர் நலனுக்கு எதிராகப் பேச வைப்பது, தமிழக சட்ட மன்ற மசோதாக்களுக்கு அங்கீகாரம் வழங்காமல் இருப்பது என நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. இதற்கெல்லாம் நாட்டின் மூத்த அமைச்சராக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம். எனவே, மோடி துவக்கி வைக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளைக் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் புறக்கணிக்கிறோம்” என்றார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in