தமிழக காங்கிரஸ் தலைவர்; செல்வப்பெருந்தகைக்கு வாய்ப்பு!

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்கிறார்கள். புதிய தலைவரை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நேற்றைய தினம் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், சோனியா ஆகியோர் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். இதையடுத்து, நேற்று இரவே புதிய தலைவர் அறிவிப்பு வெளியாகலாம் என தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்புடன் காத்திருந்தார்கள். ஆனால், டெல்லியிலிருந்து அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

இன்றும் அந்த பரபரப்புத் தொடரும் நிலையில், முன்னாள் தலைவர்கள், புதிய முகங்கள் என பலரது பெயர்கள் கட்சித் தலைமையின் பரிசீலனைக்கு வைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

கடைசியாக கிடைத்த தகவல்படி, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை மாநிலத் தலைவராக அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகச் சொல்கிறார்கள். செல்வப்பெருந்தகை மாநில தலைவராகும் பட்சத்தில் அவர் வகித்து வரும் காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் பதவி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தரப்படலாம் என்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in