நாளை முதல் தமிழகம் முழுவதும் ஹெல்த் வாக் சாலை! சென்னையில் முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்!

நாளை முதல் தமிழகம் முழுவதும் ஹெல்த் வாக் சாலை! சென்னையில் முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்!

ஜப்பானில் இருப்பதைப் போல தமிழகத்திலும் ஹெல்த் வாக் சாலைகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்த நிலையில், இந்த திட்டத்தை நாளை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்து, நடைப்பயிற்சி மேற்கொள்ளவுள்ளார்.

ஜப்பானில், மக்களிடையே நடை பயிற்சி பழக்கத்தை ஏற்படுத்த ஹெல்த் வாக் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகள் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும். கிலோ மீட்டர் என்பது 10 ஆயிரம் அடிகளாகும். தினமும் ஒருவர் பத்தாயிரம் அடிகள் நடந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதால், ஹெல்த் வாக் என்கிற பெயரில், 8 கி.மீ., தூரத்துக்கு சாலைகளை அமைத்துள்ளனர்.

இதே போன்று நாளை தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் ஹெல்த்வாக் சாலை திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பிரத்யேக சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஹெல்த்வாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் இருபுறங்களிலும் மரங்கள் நடப்பட்டு, விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் முத்துலட்சுமி ரெட்டி பூங்காவில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை வழியாக அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் வழியாக மீண்டும் முத்துலட்சுமி ரெட்டி பூங்கா வரை சாலை அமைக்கப்பட்டுள்ளது.

நாளை நவம்பர் 4ம் தேதி காலை 6 மணிக்கு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்து நடை பயிற்சி மேற்கொள்ள உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in