அண்ணா பல்கலைக்கழகத்தில் கலாம் சிலை.... முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறக்கிறார்!

அண்ணா பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் சிலை
அண்ணா பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் சிலை

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிதாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

இந்த நிகழ்ச்சி தொடர்பாக தமிழ்நாடு இளைஞர் சங்க மாநில தலைவர் எம்.எம்.ஆர் மதன் கூறுகையில், ”சென்னையில் முன்னாள் குடியரசு தலைவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு இளைஞர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. எங்களது கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு அரசு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சிலை அமைத்துள்ளது.

சிலை அமைக்கப்பட காரணமாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழர் இளைஞர் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சிலை திறப்பு விழாவில் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in