பசும்பொன் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்... தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்... முழு பயணத்திட்ட விபரம்!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை  செலுத்தும் முதல்வர் ஸ்டாலின்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் முதல்வர் ஸ்டாலின் கோப்பு படம்

இன்று பசும்பொன்னுக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின், முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளார்.

நேற்று (29.10.2023) மாலை 7 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றடைந்த நிலையில், மதுரை சர்க்யூட் ஹவுஸில் இரவு தங்கினார்.

இன்று (30.10.2023) காலை 7.30 மணிக்கு சர்க்யூட் ஹவுஸில் இருந்து புறப்பட்ட முதல்வர், 7.40 மணிக்கு கோரிப்பாளையம் தேவர் சிலை சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்பு அங்கிருந்து 07.50 மணிக்கு புறப்பட்டு ஆவின் சந்திப்பு 2 வது கேட் அருகில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தை துவங்கி வைக்கிறார். பின்பு அங்கிருந்து புறப்பட்டு 08.20 மணிக்கு தெப்பக்குளம் மருது பாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

பின்பு அங்கிருந்து 08.25 மணிக்கு புறப்பட்டு காலை 09.50 மணிக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் சென்று மரியாதை செலுத்திய பின்பு அங்கிருந்து புறப்பட்டு மதுரை அமிகா ஹோட்டலில் தங்குகிறார்.

அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையம் சென்று மதியம் 1.30 மணிக்கு பயணிகள் விமானத்தில் பயணம் செய்து 2.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து, பின்பு பிற்பகல் 3.15 மணிக்கு அவரின் இல்லம் வந்தடைகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in