
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி நடைபெற உள்ளதாக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வருகிற 31ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வரும் 31 ஆம் தேதி மாலை அமைச்சரவை அறையில் முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் விவாதிக்கப்படும் பொருட்கள் குறித்து குறிப்பு தனியே அனுப்பி வைக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு நிலவரம், நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள், புதிய அறிவிப்புகள், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
மிஸ் பண்ணாதீங்க ... ஆவின் தீபாவளி காம்போ ஆஃபர் அறிவிப்பு!
நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வேன்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தைகள்!
நடிகை அமலாபால் 2வது திருமணம்... லிப் கிஸ் கொடுத்து காதலனை அறிமுகப்படுத்தினார்!