தவறான பிரச்சாரங்களைத் தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம்: நிதியமைச்சர் அறிவிப்பு

தவறான பிரச்சாரங்களைத் தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம்: நிதியமைச்சர் அறிவிப்பு

தமிழக அரசின் 2022-23 நிதி ஆண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தற்போது தாக்கல் செய்துவருகிறார்.

தனது உரையில், “சட்டம் ஒழுங்கைத் திறம்பட நிலைநாட்டுவதன் வாயிலாகத் தமிழ்நாடு ஓர் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்துவருகிறது. சென்னை காவல் ஆணையரகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஆவடியிலும் தாம்பரத்திலும் இரண்டு புதிய ஆணையரகங்கள் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. மேலும் இத்துறைக்குத் தேவைப்படும் அனைத்துக் கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படும். சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பிரச்சாரங்களின் விளைவாக அதிகரித்துவரும் குற்றச்செயல்களைத் தடுத்திட, சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும்” என்று கூறிய அவர், காவல் துறைக்கு 10,285 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்.

முன்னதாக, சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ளோருக்கான முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்காக 4,816 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.