நிதிநிலை அறிக்கை ஒரு ஏமாற்று வெத்து வேட்டு: ஈபிஎஸ் விமர்சனம்

நிதிநிலை அறிக்கை ஒரு ஏமாற்று வெத்து வேட்டு: ஈபிஎஸ் விமர்சனம்

"திமுக விடியா அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஒரு ஏமாற்று வெத்து வேட்டு மற்றும் வார்த்தை ஜால தோரணங்களால் அமைக்கப்பட்ட வாய்பந்தல் ஆகும்" என்று எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் அத்துறை சார்ந்த அமைச்சர் கொள்கை விளக்க குறிப்பை வாசித்து இருக்கிறார். இது வேளாண் பட்ஜெட் அல்ல. விவசாயிகளை திமுக அரசு துரோகம் செய்திருக்கிறது. தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை, கால்நடைத்துறை, பட்டு வளர்ச்சித் துறை உள்பட பல்வேறு துறைகளுக்கு தனித்தனியாக அமைச்சர்கள் இருக்கும் நிலையில் அந்த துறையில் உள்ள திட்டங்கள் அனைத்தையும் வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி அதன் காரணமாக ஒரு லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து இருப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை. ஏழை எளிய பெண்கள் பயன் பெறக்கூடிய அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. 5 சவரனுக்கு உட்பட்ட அனைத்து நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள நிலையில் 48 லட்சம் பேர் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றிருப்பதாகவும் ஆனால் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து 13 லட்சம் பேருக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திமுக விடியா அரசின் 2022-2023-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஒரு ஏமாற்று வெத்து வேட்டு மற்றும் "வார்த்தை ஜால தோரணங்களால் அமைக்கப்பட்ட வாய்பந்தல்" ஆகும். மக்கள் நலனில் உண்மையில் அக்கறை கொண்ட யாராலும் இந்த மக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கையை வரவேற்க முடியாது" என்று விமர்சித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in