விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தது கோழைத்தனம்! திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அண்ணாமலை
அண்ணாமலை

திமுக அரசு  தமிழக விவசாயிகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிள்ளார்.

திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் விவசாயிகளில் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், `தமிழக அரசின் இந்த செயலை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் அமைக்க 3,200 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள், கடந்த 125 நாட்களாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

தமிழகம் முழுவதுமே தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசு, அமைதியாகப் போராடும் திருவண்ணாமலை விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. இதற்கு மேலும் திமுக அரசால் தரம் தாழ்ந்து போக முடியாது என்ற எங்கள் எண்ணத்தைத் தவறென நிரூபித்துள்ளனர். திமுக அரசின் இந்த கோழைத்தனமான செயலை தமிழக பாஜக வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த பாசிச திமுக அரசிடம் இருந்து, போராடும் விவசாயிகளை பாதுகாக்க அவர்கள் குடும்பங்களுக்கு முழு ஆதரவையும் சட்ட உதவியையும் பாஜக வழங்கும்' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

‘ஜெயிலர் 2’ - மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணி!

பதற்றம்! சிப்காட்டுக்கு எதிராக போராட்டம்; விவசாயிகள் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

ஷமி மீது கேஸ் போட மாட்டீங்கள்ல? மும்பை போலீஸை ஜாலியாக வம்பிழுத்த டெல்லி போலீஸ்!

வாட்ஸ் அப் வழங்கும் கசப்பான புத்தாண்டு ‘பரிசு’... அன்லிமிடெட் சாட் பேக்கப்புக்கு செக்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in