
மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி-யான அபிஷேக் பானர்ஜி அமலாக்கத்துறை முன்பு இன்று ஆஜரானார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின், டைமண்ட் துறைமுக தொகுதி எம்.பி-யாக அபிஷேக் பானர்ஜி உள்ளார். இவர் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜியின் மருமகன் ஆவார். மேற்குவங்க மாநிலத்தில் ஆசிரியர் பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் அபிஷேக் பானர்ஜிக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவருக்கு அமலாக்கத்துறை சமீபத்தில் சம்மன் அனுப்பியிருந்தது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
ஏற்கெனவே 2 முறை சம்மன் அனுப்பப்பட்டு ஒருமுறை 9 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியிருந்த நிலையில், 3-வது முறையாக அபிஷேக் பானர்ஜிக்கு, இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று அவர் அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜரானார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசும்போது, ”அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முழு ஆதரவு வழங்குவோம். தேவையான அனைத்து ஆதாரங்களையும் ஒப்படைத்துள்ளேன். மீண்டும் சம்மன் அனுப்பினால் விசாரணைக்கு ஆஜராவேன்” என்றார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா பணம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேட்டதற்கு, ”மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்த்து கேள்வி எழுப்பினால் அவர்கள் அலைக்கழிக்கப்படு கின்றனர். அவர் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை அவரே தீரத்துடன் எதிர்கொள்வார்” என தெரிவித்தார்.
இதனிடையே, அபிஷேக் பானர்ஜியிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், “இன்று அபிஷேக் பானர்ஜியிடம் எந்த கேள்வியும் எழுப்பப்படவில்லை. அவர் அளித்த ஆவணங்கள் மட்டும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது” என்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
நெகிழ்ச்சி... வேலைக்கு அனுப்பிய பெற்றோர்! முதலாளியால் பட்டம் பெற்ற மாணவிகள்!
ஹனிமூனில் அசோக்செல்வனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!
மேலும் 38 மீனவர்கள் விடுதலை- நிபந்தனைகளுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்
பயங்கரம்... ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எரிந்த தீ... உடல் கருகி 2 பேர் பலி
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்னென்ன? எகிறும் எதிர்பார்ப்பு!