வாக்காளர் மனநிலையை சீர்குலைக்கும் நோக்கில் சிபிஐ ரெய்டு... தேர்தல் ஆணையத்திடம் கதறும் திரிணமூல் காங்கிரஸ்

சந்தேஷ்காலி ஆய்வில் சிபிஐ மீட்ட துப்பாக்கிகள், தோட்டாக்கள்
சந்தேஷ்காலி ஆய்வில் சிபிஐ மீட்ட துப்பாக்கிகள், தோட்டாக்கள்

மேற்கு வங்கத்தின் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுகளின் போக்கு மற்றும் வாக்காளர் மனநிலையை பாதிக்கும் வகையில், சிபிஐ, என்எஸ்ஜி அமைப்புகளை பாஜக அரசு ஏவுவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஷாஜஹான் ஷேக்கின் 2 இடங்களில் மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐ நடத்திய ஆய்வுக்கு எதிராக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளது. சிபிஐ நடத்திய ஆய்வில் துப்பாக்கிகள் தோட்டாக்கள் என ஏராளமானஆயுதங்கள் மீட்கப்பட்டதில், சிபிஐ மற்றும் என்எஸ்ஜியுடன் இணைந்து பாஜக சதி செய்வதாகவும் திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

சிபிஐ சோதனை
சிபிஐ சோதனை

"மேற்கு வங்காளத்தில், டார்ஜிலிங், ராய்கஞ்ச் மற்றும் பலூர்காட் ஆகிய மக்களவைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும்போது, ​​சந்தேஷ்காலியில் உள்ள ஒரு காலி இடத்தில் சிபிஐ வேண்டுமென்றே ஒரு நேர்மையற்ற சோதனையை நடத்தியது. இந்த சோதனைக்காக தேசிய பாதுகாப்புப் படையின்(என்எஸ்ஜி) வெடிகுண்டு கண்டறியும் பிரிவையும் சிபிஐ அழைத்து வந்தது” என திரிணமூல் காங்கிரஸ் தனது மனுவில் தெரிவித்துள்ளது.

மேலும், “சோதனை நடத்துவதற்கு முன்பு சிபிஐ விசாரணை அமைப்பு மேற்கு வங்க மாநில அரசுக்கோ அல்லது காவல்துறைக்கோ முறைப்படி தெரிவிக்கவில்லை. மாநில காவல்துறை வசம் முழுமையான வெடிகுண்டு செயலிழக்கப் பிரிவைக் கொண்டிருந்தபோதும், சிபிஐ தனியாக ஒரு வெடிகுண்டு பிரிவைக் கொண்டு வந்து சோதனை நடத்தியது. விவரமறிந்த மாநில அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கே செய்தியாளர்கள் நிறைந்திருந்தனர்.

எனவே மாநில அரசுக்கு சங்கடமூட்டும் செய்திகளை ஊடகங்களில் பரப்ப முயற்சி செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. அதன்படி சிபிஐ ஆய்வில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக நாடு தழுவிய செய்திகள் பரவி இருக்கின்றன. இந்த ஆயுதங்கள் உண்மையில் சிபிஐ ரெய்டில் மீட்கப்பட்டதா அல்லது அவை சிபிஐ-யால் ரகசியமாக புதைக்கப்பட்டு மீட்கப்பட்டதா என்று சந்தேகமாக உள்ளது” எனவும் திரிணமூல் கட்சி தெரிவித்துள்ளது.

ஷாஜகான் ஷேக்
ஷாஜகான் ஷேக்

சந்தேஷ்காலி விவகாரத்தின் பின்னணி நபரான ஷாஜகான் ஷேக் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரமுகர் என்பதால், திரிணமூல் கட்சிக்கு அவப்பெயர் சேரும் வகையில் இந்த சிபிஐ ரெய்டு திட்டமிடப்பட்டதா என்றும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு ஊடகங்களையும் சிபிஐ பயன்படுத்தி உள்ளாதாக திரிணமூல் குற்றம்சாட்டுகிறது.

மேலும் "மாநில அரசின் பிரதிநிதிகள் யாரும் இல்லாத நிலையில், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை மீட்டெடுத்தது, சிபிஐ மற்றும் என்எஸ்ஜியுடன் இணைந்து அத்தகைய ஆயுதங்களை அந்த இடத்தில் புதைக்க பாஜக மேற்கொண்ட ஒரு சூழ்ச்சியாக இருக்கலாம்" என்றும் திரிணமூல் காங்கிரஸின் குற்றச்சாட்டுகள் நீள்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...

தீவிரவாதிகள் தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம்; 6 பேர் படுகாயம்

மார்க் நெக்ஸ்ட்... ஸ்கில்ஸ் ஃபர்ஸ்ட்... பள்ளி மாணவர்களுக்கான டிப்ஸ்!

பீகாரில் இருந்து உ.பி.,க்கு 95 குழந்தைகள் கடத்தல்? - அதிரடியாக மீட்ட குழந்தைகள் நல ஆணையம்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்... அமெரிக்காவில் கோவை மாணவி கைது!

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வழக்கு... போர்ச்சுகல் நாட்டில் அன்மோல் பிஷ்னோய் பதுங்கலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in