அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு: பாஜக நிர்வாகி அதிரடி கைது

செந்தமிழ்செல்வன்
செந்தமிழ்செல்வன்

தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக திருவாரூர் மாவட்ட பாஜக  பொருளாதார பிரிவு தலைவர் செந்தமிழ்செல்வன் என்பவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மன்னார்குடி அடுத்த பரவாக்கோட்டையில் நேற்று பாஜக சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாஜக திருவாரூர் மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் வழக்கறிஞர் செந்தமிழ்செல்வன் என்பவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும்,  முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, அண்ணாதுரை ஆகிய திமுக தலைவர்கள் குறித்தும் அவதூறாக பேசியுள்ளார்..

இதனையடுத்து  பரவாக்கோட்டை திமுக கிளை செயலாளர் கதிரவன் என்பவர் பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் இதுகுறித்து  புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பரவாக்கோட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீஸார்  பாஜக நிர்வாகி செந்தமிழ் செல்வனை நேற்று  கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்காக செந்தமிழ்செல்வன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதை அறிந்த பாஜகவினர் அங்கு திரண்டு காவல்துறையைக்  கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். 

மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தமிழ்ச்செல்வனை,  நீதிபதி சுரேஷ்கார்த் பிணையில் விடுவித்தார். பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டது  திருவாரூர் மாவட்ட பாஜகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in