காலம் எல்லோருக்கும் மாறுகிறது, அவர்களும் வீழ்வார்கள்: பாஜகவுக்கு பாடம் எடுக்கும் உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரேகாங்கிரஸ் ஒரு காலத்தில் தங்களை தோற்கடிக்கவே முடியாது என்று நினைத்தது: உத்தவ் தாக்கரே சுளீர்

பிரதமர் பதவியைப் பற்றி தான் கனவு காணவில்லை என்றும், 2024 தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த தனது கட்சி முழு பலத்தையும் அளிக்கும் என்று மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவில் பாஜகவுடன் சண்டையிட்டு வருவதாகவும், அவர் பிரதமர் ஆகலாம் என்றும் சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத் கூறினார். ஆனால், 2024ம் ஆண்டிற்கான பிரதமர் பதவியைப் பற்றி நான் கனவு காணவில்லை என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். அவர், “மத்திய ஏஜென்சிகளின் முறைகேடு குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம். எதிர்க்கட்சித் தலைவர்கள் குழப்பத்தில் உள்ளனர், மத்திய அமைப்புகளின் தொடர்ச்சியான தவறான பயன்பாடு நிறுத்தப்படவில்லை. ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சி தங்களை தோற்கடிக்க முடியாது என்று நினைத்தார்கள், ஆனால் அவர்கள் தோல்வியை எதிர்கொண்டார்கள், இப்போது பிஜேபிக்கும் அதே நிலைதான். ஆனால் காலம் எல்லோருக்கும் மாறுகிறது. அவர்களும் வீழ்வார்கள், அவர்களும் தோற்கடிக்கப்படுவார்கள். கஸ்பா பெத் சட்டமன்ற இடைத்தேர்தலில் மகா விகாஸ் அகாதி கூட்டணி வெற்றி பெற்றது, ஒன்றுபட்டால், பாஜகவுக்கு எதிராக வெற்றிபெற முடியும் என்பதை நிரூபித்துள்ளது” என்று கூறினார்.

மேலும், "விவசாயிகள் பயிர் இழப்பை சந்தித்துள்ளனர். ஒரு தொகுப்பை அறிவிப்பது மட்டும் போதாது, அரசாங்கம் முழு உதவியும் செய்யவேண்டும் வீட்டில் உட்கார்ந்து வெளியே செல்லாமல் இருந்ததாக நான் குற்றம் சாட்டப்பட்டேன், இப்போது நீங்கள் விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்பதை நான் பார்க்க விரும்புகிறேன். இல்லையெனில், நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று கூறினார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in