திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவருக்கு கொலை மிரட்டல்: நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

திண்டுக்கல் மாவட்ட பாஜக
தலைவருக்கு கொலை மிரட்டல்: நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் தனபால். இவர் திண்டுக்கல் மாநகராட்சி 14-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள 34 கடைகளை ஏலமிட்டதில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து கடந்த 18-ம் தேதி இவர் உண்ணாவிரதம் இருந்தார்.

இதனால், இவரைக் கண்டித்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் சரவணன், தனபால் வீட்டில் போஸ்டர் ஒட்டினார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே நேற்றிரவு வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த, சரவணன் ஆயுதங்களைக் காட்டி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தனபால் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்," வார்டு கவுன்சிலர் என்ற அடிப்படையில், திண்டுக்கல் மாநகராட்சி முறைகேடுகளைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்தேன். எனக்கு மிரட்டல் விடுக்கும் செயல் ஜனநாயகத்திற்கு விரோதமானது" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in