ஈபிஎஸ் பேசியதை செய்தியாக ஒளிபரப்பக் கூடாது என மிரட்டல்: தமிழ்நாடு அரசு மீது வேலுமணி குற்றச்சாட்டு

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசிய செய்தியை வெளியிடக்கூடாது என்று சேனல்கள் மிரட்டப்படுவதாக அதிமுக கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், " திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இரண்டு மணி நேரம் தமிழ்நாடு மக்களுக்காக நேற்று பேசினார். ஆனால் எந்த தொலைக்காட்சியிலும் அவர் பேசியதைக் காட்டவில்லை. அந்த செய்தியை வெளியிடக் கூடாது என்று மிரட்டுவதால் தான் எடப்பாடி பழனிசாமி பேசியது எந்த சேனல்களிலும் வெளியாகவில்லை" என்றார்.

கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் குறைவான கடன் இருப்பதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு, "வரிகளை அதிகப்படுத்தியதால் தான் அரசுக்கு வருமானம் அதிகரித்துள்ளது. இருந்தாலும் கடன் வாங்கியதும் உண்மை தானே? " என்று கேள்வி எழுப்பினார். மேலும், "தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று பல்வேறு பிரச்சினைகளை எடப்பாடி பழனிசாமி முன் வைத்தார். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் பொத்தாம் பொதுவாக ஒரே வார்த்தையில் அமைதி பூங்காவாக தமிழகம் இருப்பதாக கூறியுள்ளார்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in