
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டான் இன்று தனது பிறந்த நாளையொட்டி தன்னை வாழ்த்த வந்தவர்களுக்கு மஞ்சப்பையில் மரக்கன்றுகளை வழங்கினார்.
இன்று 70-வது பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திமுகவினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள், திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இப்படி வாழ்த்த வருபவர்கள் அனைவருக்கும் முதல்வர் இல்லத்தில் இருந்து மஞ்சள் பையில் மரக்கன்று ஒன்று வழங்கப்படுகிறது.
பசுமையான தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்பதையும், 'மீண்டும் மஞ்சப்பை' இயக்கத்தை வலியுறுத்தியும் இதனை முதலமைச்சர் முன்னெடுத்துள்ளார் என்று முதல்வர் இல்லம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.