ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தொல்.திருமாவளவன் கைது!

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தொல்.திருமாவளவன் கைது!

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி உள்பட நூற்றுக்கணக்கான விசிகவினர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் ரவி, ஆளுநர் உரையில் இருப்பதை படிக்காமல் தன்னிச்சையாக தனது சொந்த கருத்துக்களை பேசினார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின், உடனே எழுந்து ஆளுநர் பேசிய தனிப்பட்ட கருத்துக்களை அவை குறிப்பில் இருந்து நீக்கக்கோரி தனித்தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். அப்போது ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

முன்னதாக ஆளுநர் உரையை கண்டித்து திமுக கூட்டணியை கட்சியினர் சட்டப்பேரவைக்குள்ளேயே முழக்கமிட்டனர். அந்த முழக்கத்தையும் மீறி ஆளுநர் ரவி தனது சொந்த கருத்தை பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் ஆளுநரை கண்டித்தும் அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராமகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி சார்பில் கோபண்ணா உள்பட நூற்றுக்கணக்கான விசிக தொண்டர்கள் பங்கேற்றனர். இதன் பின்னர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி உள்பட 500க்கும் மேற்பட்ட விசிக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். திருமாவளவனின் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in