மாநகராட்சி கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு... வெளியேறிய திமுக மேயர்!

மேயர் சண். ராமநாதன்
மேயர் சண். ராமநாதன்

தஞ்சை மாநகராட்சியில் இன்று அவசர கூட்டம் நடைபெற்றது. மேயர் சண். ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநகராட்சி அலுவலர்கள் ,கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதலாவதாக புதிதாக ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட மகேஸ்வரி பேசும்போது, தான் பெரியகுளம் நகராட்சி, தர்மபுரி நகராட்சிகளில் பணியாற்றும் போது விருதுகளை பெற்றுள்ளதாகவும், அதேபோல், தஞ்சாவூர் மாநகராட்சியிலும் சிறப்பாக பணிபுரிந்து பல்வேறு விருதுகளை பெற கடுமையாக உழைப்பேன் என்றார்.

தஞ்சை மாநகராட்சி
தஞ்சை மாநகராட்சி

இதனை தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மேயர் சண். ராமநாதன் பேசினார். அதில், தஞ்சாவூர் சரபோஜி மார்க்கெட், பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் வாடகை அதிகம் இருப்பதாக ஏலம் எடுத்தவர்கள் கூறியிருந்தனர். எனவே அவர்களின் வேண்டுகோளை ஏற்று மறு ஏலம் விட்டு குறைந்த வாடகைக்கு விடப்பட்டுள்ளது என்றார்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்கள்
வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்கள்

அப்போது மாநகராட்சி கவுன்சிலர்கள் நீலகண்டன், உஷா, காந்திமதி, கண்ணுக்கினியாள் உள்ளிட்ட சிலர் மாமன்ற கூட்டத்தில் விவாதிக்காமல் எப்படி கடைகளுக்கு மறு ஏலம் விடலாம் என கூறி எதிர்ப்பு தெரிவித்து மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை எதிர்பார்க்காத மேயர், மாநகராட்சியில் மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், முறைப்படி தான் ஏலம் நடந்ததாகவும், கூட்டம் முடிவடைந்து விட்டதாகவும் கூறி வெளியேறினார்.

அப்போது கவுன்சிலர்கள் பேசும் மைக் திடீரென அணைக்கப்பட்டது. மைக் அணைக்கப்பட்டதற்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தஞ்சை மாநகராட்சி அவசரக் கூட்டத்தில் நடந்த இந்த அமளி சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in