காலை எழுந்தவுடன் அவர்களுக்கு இதுதான் வேலை: பாஜகவை சாடும் அர்விந்த் கேஜ்ரிவால்!

காலை எழுந்தவுடன் அவர்களுக்கு இதுதான் வேலை: பாஜகவை சாடும் அர்விந்த் கேஜ்ரிவால்!

காலையில் எழுந்தவுடன் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகளை முடக்கும் வேலையை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்துவதில் முறைகேடு தொடர்பாக சிபிஐயின் எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ள 15 குற்றவாளிகள் பட்டியலில் மணீஷ் சிசோடியா முதலிடத்தில் உள்ளார். மதுபானக் கொள்கையை அமல்படுத்துவதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், டெல்லியின் கலால் துறையைக் கையாளும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு மற்றும் 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமையன்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் 12 பேருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால், “பணவீக்கம் காரணமாக நாடு முழுவதும் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடும் இந்த நேரத்தில் மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தைக் குறைக்கப் போராட வேண்டும். ஆனால் மத்திய அரசோ காலையில் எழுந்தவுடன் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகளை முடக்குகிறது. இப்படிப்பட்ட நாடு எப்படி முன்னேறும். மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது கண்டனத்துக்குரியது.” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in