`இதில் ஆச்சரியம் இல்லை; நண்பருக்கு 3-வது இடம் பிடித்துக் கொடுத்துள்ளார் மோடி'- விளாசும் அமைச்சர் மனோதங்கராஜ்

`இதில் ஆச்சரியம் இல்லை; நண்பருக்கு 3-வது இடம் பிடித்துக் கொடுத்துள்ளார் மோடி'- விளாசும் அமைச்சர் மனோதங்கராஜ்

``பிரதமர் நரேந்திர மோடி நம் நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த பெருமை இதுதான்'' என அதானியை முன்வைத்து காட்டமாகத் தெரிவித்துள்ளார் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ்.

இதுகுறித்து மனோ தங்கராஜ் தன் முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது, “2001-ல் நரேந்திர மோடி குஜராத் முதல்வரான பிறகுதான், கெளதம் அதானியின் தொழிலும் வியாபாரமும் உயரே பறக்கத் தொடங்கின" என்கிறார் அரசியல் நிபுணர் ஜேம்ஸ் கிராப்ட்ரீ. அதனடிப்படையில் பார்க்கையில், இன்று அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 3-ம் இடம் பிடித்திருக்கிறார் என்பதில் ஆச்சரியம் இல்லை. ஒரு நாட்டை ஆள்பவரால், அவரது நண்பருக்கு இப்படி ஒரு இடம் பிடித்துக்கொடுப்பது தானே முதல் வேலை.

கடந்தவாரம் பிட்ச் குழுமத்தின் ஆய்வறிக்கையில், அதானி குழுமம் 2.2 லட்சம் கோடி கடன் வைத்திருப்பதாகவும், அந்த கடனை அவரால் கட்ட முடியாமல் கூடப் போகலாம் என்றும் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டிருந்தது. என்ன நடந்தாலும், உலகின் 3-வது பணக்காரருக்கு அதிக கடன் கொடுத்த நாடு என்ற பெருமையை, இந்தியப் பிரதமர் நமக்குப் பெற்றுத் தந்துள்ளார்” என காட்டமாகத் தெரிவித்துள்ளார். திமுகவினர் பலரும் இந்தப் பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in