அமைச்சரின் குரூரமான பதில் இது: மதுரை எம்பி சு.வெங்கடேசன் சாடல்

அமைச்சரின் குரூரமான பதில் இது: மதுரை எம்பி சு.வெங்கடேசன் சாடல்

இந்தியாவில் உள்ள 14 கோடியே 43 லட்சம் மூத்த குடிமக்களில் 78 சதவீதம் பேர் எவ்வித வருமானமும் இன்றி தங்களது குழந்தைகளை நம்பி உள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கான பயணச் சலுகை மறுத்து குரூரமான பதிலை அளித்துள்ளார் ரயில்வே அமைச்சர்" என்று மதுரை எம்பி வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

மக்களவையில் மதுரை எம்பி சு.வெங்கடேசன், மூத்தக்குடி மக்களுக்கான ரயில் கட்டண சலுகையை வழங்க கோரி நாடாளுமன்ற நிலை குழு பரிந்துரை அளித்துள்ளதா? எதற்காக அச்சலுகை வழங்கப்படவில்லை என்று வெங்கடேசன் எம்பி இன்று கேட்டிருந்தார். இதற்கு டிசம்பர் 7-ம் தேதி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி பதில் அளித்துள்ளார். அந்த பதிலில் 2019-2020-ம் ஆண்டில் மானியங்களுக்காக 59,837 கோடி செலவிடப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளுக்கும் 53 சதவீதம் தான் கட்டணம் சராசரியாக வசூலிக்கப்படுகிறது. 47 சதவீதம் மானியம் அளிக்கப்படுகிறது என்றும் மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகளுக்கு சலுகை அளிக்கப்படுகிறது என்றும் பதிலளித்துள்ளார்.

இப்படி மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை மறுக்கப்படுவதால் அவர்கள் பயணம் செய்வதை தவிர்க்கின்ற நிலைமை இயலாதா? அவர்களின் சேமிப்புகள் கரையாதா? என்ற கேள்விக்கு ரயில்வே நிறைய வகையிலான ரயில்களை, அதாவது தொடர்ந்து துரந்தோ, வந்தே பாரத், தேஜஸ், காட்டிமேன், ஹம்சபார், எக்ஸ்பிரஸ், மெயில், பாசஞ்சர் என இயக்குகின்றன. அவற்றில் வெவ்வேறு வகுப்பு பயணங்களும் முதல் இரண்டாம் சாதாரண வகுப்பு உள்ளன. ஆகவே மூத்த குடிமக்கள் அவரவர் விரும்புகிற வகையில் பயணம் செய்து கொள்ளலாம் என்றும் பதில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்துள்ள அரசு வெங்கடேசன் எம்பி, "இவர்கள் சொல்கிற மானிய கணக்கு பழமையானது. அப்போதும் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. ஆகவே மானியத்தை காரணம் காண்பிப்பது ஏமாற்றுகிற வேலை என்று தெரிவித்துள்ளார். நீங்கள் தந்து வரும் கார்ப்பரேட் சலுகைகளும் வரி குறைப்புகளும் இதை பல மடங்கு இல்லையா என்ற கேள்வியை எழுப்பி உள்ளார். நாடாளுமன்ற நிலைக்குழு பயணிகள் வருமானம் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் இந்த மூத்த குடிமக்கள் பயணச் சலுகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை பயணிகள் வருமானம் 43,300 கோடி வந்துள்ளது என்றும் இதே காலத்தில் சென்ற ஆண்டு 24 ஆயிரத்து 600 கோடி தான் வருமானம் வந்தது என்றும் ரயில்வே அமைச்சகம் முன்பு செய்தி வெளியிட்டிருந்தது.

அந்த அடிப்படையில் பார்த்தால் பயணிகள் வருமானம் சென்ற ஆண்டு விடவும் 2019- 2020 விடவும் கூடுதலாக 50,000 கோடி எட்டும் என்று எதிர்பார்க்கலாம். இந்த நிலையில் நாடாளுமன்ற நிலை குழுவின் பரிந்துரையையும் புறந்தள்ளி மூத்த குடி மக்களுக்கான பயண சலுகை மறுப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. மூத்த குடிமக்கள் மருத்துவத்திற்காகவும் சுற்றுலாவுக்காகவும் செல்லும் பயணத்திற்கு பயணச் சலுகை மறுப்பது ஈவிரக்கமற்ற செயலாகும் என்று கூறியுள்ளார். இதைவிட ரயில்களின் பல வகை பயண வகுப்புகளின் பல வகைகளை சொல்லி அவற்றில் அவரவர் தெரிவு செய்து கொள்ளட்டும் என்று கூறியிருப்பது குரூரமானது. வக்கு இருக்கிறதுக்கு தகுந்த மாதிரி போய்க்கொள். இல்லாவிட்டால் போகாமல் இரு என்று சொல்கிற துணி அமைச்சரின் பதிலில் இருப்பது வருந்தத்தக்கது. ஒரு நாகரிக சமூகத்தின் பண்புகளில் ஒன்று மூத்த குடி மக்களின் நலன் பேணுவது என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். கோரிக்கை வைத்தால் எள்ளி நகையாடுவது அழகல்ல என்றும் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

மூத்த குடிமக்கள் எந்த விதமான வருமானமும் இங்கு 78 சதமானம் பேர் தங்கள் குழந்தைகளை நம்பி உள்ளார்கள் என்று தேசிய மாதிரி ஆய்வு கூறுகிறது. குழந்தைகளோ வேலையில்லா திண்டாட்டத்தாலும் வருமானம் குறைவான வேலையாலும் விலைவாசி உயர்வாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் மூத்த குடி மக்களுக்கான இந்த பயணச் சலுகை மறுப்பது மூத்த குடிமக்களை மேலும் உளவியல் சிக்கலுக்குள் தள்ளுவதற்கு வழி வகுப்பும். 14 கோடியே 43 லட்சம் மூத்த குடிமக்கள் தமது நாட்டில் உள்ளார்கள். இவர்களின் நலனை புறக்கணிக்கும் வகையில் ரயில்வேயின் இந்த முடிவு கடுமையான கண்டனத்திற்குரியது என்றும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in