அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்ட முதல் 3 முக்கிய கோப்பு இதுதான்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்ட முதல் 3 முக்கிய கோப்பு இதுதான்!

அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். முதலில் 3 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர் சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மலர் வைத்து வைத்து மரியாதை செலுத்தினார். இதன்பின் தலைமைச் செயலகம் வந்த உதயநிதி ஸ்டாலின், அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையில் அமர்ந்து அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன் பின்னர் முதலில் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார் உதயநிதி ஸ்டாலின். முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு 40 கோடி ஒதுக்கீடு செய்வதற்கான உத்தரவிலும், வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்கள் 9 பேருக்கு தலா 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கவதற்காக உத்தரவுகளிலும், துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவருக்கு 4 லட்சம் வழங்கும் உத்தரவுக்கான கோப்புகளிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார். அமைச்சர் நேருவிடம் இருந்து பேனாவை பெற்றுக் கொண்டு கோப்புகளில் கையெழுத்திட்ட பின் அந்த பேனாவை உதயநிதி ஸ்டாலினுக்கு கே.என்.நேரு பரிசாக அளித்தார்.

இதை தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, பெரிய கருப்பன், சேகர் பாபு, மெய்யநாதன், வெள்ளக்கோயில் சாமிநாதன் மற்றும் திமுக எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் உதயநிதி ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து துறை அலுவலக அதிகாரிகள் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்ற காரணத்தால் தலைமைச் செயலகம் பரபரப்புடன் காணப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in