`தமிழகத்தில் வாய்ப்பூட்டு சட்டம் அமலில் உள்ளதா?'- அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை கேள்வி

இன்பதுரை
இன்பதுரை

தமிழகத்தில் வாய்ப்பூட்டு சட்டம் அமலுக்கு வந்துவிட்டதா? என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை தன் ட்விட்டர் பக்கத்தில் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் எல்.எல்.ஏ இன்பதுரை, கடந்த தேர்தலிலும் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு அப்பாவுவிடம் தோல்வி அடைந்தார். திமுகவினர் போடும் வழக்குகளை எதிர்கொள்ளும்வகையில் அதிமுகவில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட சட்ட வழிகாட்டி குழுவிலும் இருக்கும் இன்பதுரை தன் ட்விட்டர் பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் இன்பத்துரை, “தமிழகத்தில் வாய்ப்பூட்டு சட்டம் அமலில் உள்ளதா? முதல்வருக்கு எதிராக எவரேனும் மூச்சுவிட்டால் கூட போலீஸுக்கு மூக்கு சிவக்கிறதே? அரசுக்கு எதிராக தவறாக பேசுபவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள். தப்பில்லை! அதுதான் சட்டம். ஆனால் சிறையிலடைத்துத்தான் விசாரிப்போம் என்பது பாசிசம்!” என தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆதரவாளரான கிஷோர் கே சுவாமி புதுவையில் இன்று காலையில் கைது செய்யப்பட்டார். அவர் கைதைக் கண்டிக்கும் வகையில் தான் முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in