‘உத்தவ் தாக்கரேவுக்கு இதுதான் நடந்தது’: முதுகில் குத்தி ரத்தம் வழியும் ஓவியத்தை பகிர்ந்த சஞ்சய் ராவத்!

‘உத்தவ் தாக்கரேவுக்கு இதுதான் நடந்தது’: முதுகில் குத்தி ரத்தம் வழியும் ஓவியத்தை பகிர்ந்த சஞ்சய் ராவத்!

உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 39 சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியதால், நேற்று இரவு அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் உத்தவ் தாக்கரேவின் முதுகில் குத்தியது போன்ற புகைப்படத்தை சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் பகிர்ந்துள்ளார்.

சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயின் முதுகில் குத்தப்பட்ட காயங்களுடன் இருக்கும் ஓவியத்தை பகிர்ந்து ட்வீட் செய்துள்ள சஞ்சய் ராவத், "இதுதான் நடந்தது" என்று மராத்தி மொழியில் எழுதியுள்ளார்.

சிவசேனா தலைமையிலான மகா விகாஷ் அகாடி அரசு சட்டப்பேரவையில் இன்று தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்திருந்தார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டநிலையில் உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை நேற்று இரவு ராஜினாமா செய்தார்.

உத்தவ் தாக்கரே பதவி விலகிய நிலையில் பாரதிய ஜனதா கட்சி, ஏக்நாத் ஷிண்டே பிரிவின் ஆதரவுடன் மகாராஷ்ட்டிராவில் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இது தொடர்பாக பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்களுடன் கோவா வந்தடைந்த ஏக்நாத் ஷிண்டே, “மந்திரி பதவிகள் குறித்து பாஜகவுடன் இன்னும் ஆலோசனை நடத்தவில்லை, அது விரைவில் நடக்கும். அதுவரை எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம்" என தெரிவித்துள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in