நள்ளிரவில் பற்றி எரிந்த பாஜக நிர்வாகியின் கார்: சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை நடத்தும் போலீஸ்

நள்ளிரவில் பற்றி எரிந்த பாஜக நிர்வாகியின் கார்: சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை நடத்தும் போலீஸ்

திருவள்ளூர் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகரின் கார் நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவர் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவின் தலைவராக இருந்து வருகிறார். வழக்கம் போல 5-ம் தேதி இரவு வீட்டிற்கு வெளியே காரை நிறுத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் கார் தீப்பற்றி எரிவதாக அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து தியாகராஜன் பதறியடித்துக் கொண்டு வந்து பார்த்தார். அப்போது காரின் முன்பகுதி தீப்பற்றி எரிந்துள்ளது.

அப்பகுதியினருடன் சேர்ந்து தீயை அணைத்த தியாகராஜன் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீப்பற்றியதா அல்லது தொழில் போட்டி காரணமாக கார் தீப்பற்றியதா என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளரின் கார் இதுபோல் பற்றி எரிந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in