தமிழகத்தில் ராகுல் காந்தி போட்டியிட்டால்... திருநாவுக்கரசர் அதிர்ச்சி முடிவு!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியிட்டால், அவருக்காக  தான் தேர்தலில்  போட்டியிடப் போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தின் மீது அதிக அக்கறை காட்டி வருகிறார். தமிழ், தமிழ்நாடு ஆகியவை குறித்து அவர் அதிகமாக பேசி வருகிறார்.  நானும் தமிழர் தான் என்றும் கூட அவர் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இந்த நிலையில் அண்மையில் நடிகர் கமல்ஹாசனிடம்  உரையாடிய அவர், தமிழ் மக்கள் தன் மீது காட்டி வரும் அன்பு வேறு எங்கும் கிடைக்காதது என்கிற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தார். 

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அவர் தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அவர் தமிழ்நாட்டிற்கு மிக அருகில் உள்ள கேரளத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். இந்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் வலுவாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

கேரளத்தை ஒட்டி இருக்கும் கன்னியாகுமரி தொகுதியில் அவர் போட்டியிட வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக இருக்கிறது. இதனை அவரிடமும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வற்புறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ராகுல் காந்தி,  தமிழகத்தில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவாக தான் திருச்சியில் போட்டியிட போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி முன்னிறுத்தப்படுவார். ராகுல் காந்தி தமிழ்நாட்டில் போட்டியிட்டால் மிகப்பெரிய வெற்றியை பெறுவார் என்று கூறியிருக்கும் திருநாவுக்கரசர், தமிழ்நாட்டில்  பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  திருநாவுக்கரசரின் இந்த கூற்று தமிழக காங்கிரஸ் மற்றும் திமுக வட்டாரத்தில்  பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.  இதையும் வாசிக்கலாமே...

அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வால் மாணவி தற்கொலை!

அதிர்ச்சி... ‘பிரேமம்’ இயக்குநருக்கு ஆட்டிஸம் பாதிப்பு!

110 நாட்கள் உண்ணாவிரதம்... 16 வயது சிறுமியின் ஆச்சரிய சாதனை!

1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!

படப்பிடிப்பில் பிரபல நடிகர் படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி! 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in