`ஒருபோதும் வாய்ப்பே இல்லை; காத்திருப்பவர்கள் ஏமாந்து போவார்கள்'- அண்ணாமலைக்கு திருமாவளவன் பதிலடி

திருமாவளவன்
திருமாவளவன்`ஒருபோதும் வாய்ப்பே இல்லை; காத்திருப்பவர்கள் ஏமாந்து போவார்கள்'- அண்ணாமலைக்கு திருமாவளவன் பதிலடி

``திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே எந்த சக்தியாலும் பிளவை ஏற்படுத்த முடியாது" என்று திருமாவளவன் கூறினார்.

திருவண்ணாமலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாளவஅவர், திமுக முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும். திமுகவிற்கும், விசிகவிற்கும் இடையே விரிசல்களை ஏற்படுத்த வேண்டும் என சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அதற்கு ஒருபோதும் வாய்ப்பே இல்லை. அதுபோன்ற எண்ணங்களை எதிர்பார்த்து காத்திருபப்வர்கள் ஏமாந்து தான் போவார்கள். திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே எந்த சக்தியாலும் பிளவை ஏற்படுத்த முடியாது.

பாமகவின் கலாச்சாரம் என்பது ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு, தேர்தல் நெருங்கி வரும் ஓரிரு ஆண்டுகளில் எந்தக் கூட்டணியில் இருக்கிறார்களோ அந்த கூட்டணியில் இருந்து மெல்ல விலகி, வேறொரு நிலைப்பாட்டை எடுப்பார்கள். கட்சியை வலுப்படுத்துவதற்காகவே இதுபோன்ற சூழ்ச்சிகளையும், உத்திகளையும் பாமக கையாள்கிறது. திமுகவுடன் பேசிக்கொண்டே, அதிமுகவின் பேரத்தை உயர்த்துவதும், அதிமுகவுடன் பேசிக்கொண்டே திமுகவிடம் பேரத்தை உயர்த்துவதும் பாமகவின் தேர்தல் தந்திரம். ஆளும் கட்சி கூட்டணி மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டதன் வெளிப்பாடே இந்த வெற்றியை மக்கள் வழங்கி இருக்கிறார்கள். மதவாத சக்திகளான பாமக மற்றும் பாஜக உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் கூட்டணியில் இருக்காது என்ற கொள்கை முடிவில் பயணித்து வருகிறோம்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in