அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை; ஜெயக்குமார் அறிவிப்பு... திருமாவளவன் வரவேற்பு!

தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன்

தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன கருத்து அதிமுக தலைமையை கொந்தளிக்க செய்தது. இதற்கு பதில் அளித்த அண்ணாமலை மீண்டும் அதிமுக முன்னாள் தலைவர்களை வசை பாடினார். இது மீண்டும் கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலையின் பேச்சை இனியும் பொறுப்பதாக இல்லை. கூட்டணியை பொறுத்தவரை பாஜக எங்களுடன் தற்போது இல்லை. தேர்தல் வரும் போது தான் அதை முடிவு செய்ய முடியும்.

எங்களுடன் பாஜக தற்போது கூட்டணியில் இல்லை. இதுதான் எங்களது நிலைப்பாடு. இனிமேல் அண்ணாமலை எங்கள் தலைவர்களை பற்றி விமர்சனம் செய்தால் கடுமையான அளவுக்கு விமர்சனங்களை சந்திக்க நேரிடும். அண்ணாமலையை அதிமுக தொண்டர்கள் தாறுமாறாக விமர்சிப்பார்கள். அண்ணாமலை கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். பாஜக உடனான கூட்டணி குறித்து தேர்தலின் போது முடிவு செய்வோம். அண்ணாமலையை தேசிய தலைமை தான் இயக்குகிறது. எங்களை விமர்சிக்கும் பாஜகவை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும். அண்ணாமலை தனித்துப்போட்டியில் நோட்டாவுக்கு கீழ் தான் வாங்கு வாங்குவார்" என்று விமர்சித்திருந்தார்.

ஜெயக்குமாரின் இந்த கருத்தை வரவேற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ``பாஜக கூட்டணியை அதிமுக முறித்து கொண்டிருப்பது வரவேற்கதக்கதாகும். அதிமுக தனித்து போட்டியிட்டால் அதன் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ளும். அதே வேளையில் பாஜகவுடன் அதிமுக இணைந்து பயணித்தால் அதன் வங்கி குறைந்துவிடும்'' என கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in