`உங்களை அழிக்கப் பார்க்கிறார்கள்; உஷாராக இருங்கள்'- அதிமுகவினரை அலர்ட் செய்யும் திருமாவளவன்

`உங்களை அழிக்கப் பார்க்கிறார்கள்; உஷாராக இருங்கள்'- அதிமுகவினரை அலர்ட் செய்யும் திருமாவளவன்

"அதிமுகவின் பலத்தை பயன்படுத்தி சனாதன சக்திகள் தமிழகத்தில் காலூன்ற பார்க்கிறது. அதிமுக தொண்டர்களே, அதிமுக தலைவர்களே உஷாராக இருங்கள், எச்சரிக்கையாக இருங்கள்" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறினார்.

சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் நிர்வாகிகள் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "சனாதன சக்திகள் தமிழ்நாட்டை ஒரு வன்முறை களமாக மாற்றுவதற்கு பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அதிமுகவில் ஏறி சவாரி செய்கிறார்கள்.

அதிமுகவின் பலத்தை பயன்படுத்தி அவர்கள் தமிழகத்தில் காலூன்ற பார்க்கிறது. அதிமுக தொண்டர்களே, அதிமுக தலைவர்களே உஷாராக இருங்கள், எச்சரிக்கையாக இருங்கள். உங்களையும் அழிக்க பார்க்கிறார்கள். உங்களை பயன்படுத்தி ஒட்டுமொத்த தமிழகத்தை சீர்குலைக்க பார்க்கிறார்கள்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in