விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது 61 வது பிறந்த நாளை இன்று கொண்டாடும் நிலையில் அவருக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘’இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் - புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும், செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் திருமாவளவன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்’’ என குறிப்பிட்டுள்ளார்.
இதே போல நடிகர் கமலஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ’’சமூகநீதிக்கான போராட்டத்தில் தீரத்தோடு களமாடும் என் அன்புச் சகோதரர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் நல்ல ஆரோக்யத்துடன் நீடூழி வாழ பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்’’ எனக் கூறியுள்ளார்.
நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘’சனாதனத்தை வேரறுக்க திருமாவளவன் நூறாண்டுகள் வாழ வேண்டும். டிஜிட்டல் இந்தியாவை விட திருந்திய இந்தியா திருமா இந்தியா தான் வேண்டும்’’ என வாழ்த்தியுள்ளார்.
தன்னலம் பாராமல் தன் மக்களின் நலனுக்காக தன்னையே அர்பணித்துக்கொண்ட, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திரு தொல்.திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்'' என இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.