`ஆர்எஸ்எஸ், விஎச்பிக்கு இது பொருந்தாதா?'- பிஎஃப்ஐ தடையால் கொந்தளிக்கும் திருமாவளவன்

`ஆர்எஸ்எஸ், விஎச்பிக்கு இது பொருந்தாதா?'- பிஎஃப்ஐ தடையால் கொந்தளிக்கும் திருமாவளவன்

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை பாஜக அரசு ஐந்தாண்டுகளுக்குத் தடை செய்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர தொல்.திருமாவளவன், ஆயுதப் பயிற்சி, ஆணவக் கொலைகள் போன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட அமைப்புகளுக்கு இந்த தடை பொருந்தாதா? என்று கொந்தளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை பாஜக அரசு ஐந்தாண்டுகளுக்குத் தடை செய்துள்ளது. இது எதிர்பார்த்த ஒன்று தான். ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட செயல்திட்டங்களை ஒவ்வொன்றாக சங்பரிவார் அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அவற்றில் இதுவும் ஒன்று. பாபர் மசூதியை இடித்துவிட்டு அதே இடத்தில் ராமர் கோயில் கட்டுவது தொடங்கி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்புத் தகுதியை நீக்குவது; முத்தலாக் சட்டத்தை ரத்துசெய்வது; குடியுரிமை சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களை ஓரங்கட்டுவது; பசுப்புனிதம்- லவ்ஜிகாத்-மதமாற்றம் என்னும் பெயரில் இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பை வலுப்படுத்துவது;

இஸ்லாமியத் தீவிரவாதம் என்னும் பெயரில் இஸ்லாமிய அமைப்புகளை அச்சுறுத்துவது என இன்று பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்வது வரை அவர்களின் முன்முடிவு திட்டங்களைச் செயற்படுத்துகின்றனர். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு யாருக்கு இருந்தாலும் அது வன்மையான கண்டனத்துக்குரியது தான். ஆனால், ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங்தள், சனாதன் சன்ஸாத், ராம்சேனா, அனுமன் சேனா, சங்கராச்சாரியா பரிஷத், ரன்வீர் சேனா போன்ற அமைப்புகளுக்கு இது பொருந்தாதா? ஆயுதப் பயிற்சி, குண்டு வெடிப்பு, கும்பல் கொலைகள், ஆணவக் கொலைகள் போன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் இவற்றைத் தடை செய்ய வேண்டாமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in