இளையராஜா, கங்கை அமரனை இயக்குவது இவர்கள்தான்: திருமாவளவன் அதிர்ச்சி தகவல்

இளையராஜா, கங்கை அமரனை இயக்குவது இவர்கள்தான்: திருமாவளவன் அதிர்ச்சி தகவல்

"இசையமைப்பாளர்கள் இளையராஜா, கங்கை அமரன் ஆகியோரை பின்னால் இருந்து இயக்குபவர்கள் யார் என்ற கேள்விக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி அதிர்ச்சி பதிலை அளித்துள்ளார்.

பணியாளர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும், பொது மேலாளர் பதவிக்கு இடஒதுக்கீடு தேவை என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பேரவை சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் எதிரே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவவவன், விக்னேஷாக இருந்தாலும் சரி, பிரம்மபுரம் விஜய்யாக இருந்தாலும் சரி, திருவண்ணாமலையை சேர்ந்த தங்மணியானாலும் சரி, இவர்களின் மரணம் காவல் துறை மற்றும் நீதித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது நடந்துள்ளது. இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புரட்சியாளர் அம்பேக்தர் அவர்கள் வர்ணாசிரமத்துக்கு எதிராக, மனுதர்மத்துக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தவர். இந்து மதத்தில் இருந்து வெளியேறியவர். இதற்காகவே தன் வாழ்நாள் முழுவதும் இறுதி மூச்சுவரை போராடியவர். அப்படிப்பட்டவரை மோடியுடன் ஒப்பிடுவது என்பது அம்பேத்கரை வெறுக்க துணிக்கிற முயற்சி. இது இசைஞானிக்கும் தெரியாது, அவரது அன்பு உடன் பிறப்புக்கும் தெரியாது. அவர்களை யாரோ இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது பரிதாபப்படுகிறேன். வேதனைப்படுகிறேன்" என்றார்.

இளையராஜா பின்னால் சங்பரிவார் கும்பல் இருப்பதாக நினைக்கிறீங்களாக என்ற கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், அப்படித்தான் நான் கருதுகிறேன் என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in