‘வைணவத்துக்கும் சைவத்துக்குமிடையிலான யுத்தமே இராமாயணம்’ - திருமாவளவன்

திருமாவளவன்
திருமாவளவன்

வைணவத்துக்கும் சைவத்துக்குமிடையிலான யுத்தமே இராமாயண காப்பியம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “வைணவத்துக்கும் சைவத்துக்குமிடையிலான யுத்தத்தின் உருவகக் காப்பியமே இராமாயணம் எனவும் புரிந்து கொள்ளலாம். இராமன் வைணவத்தின் அடையாளம். இராவணன் சைவத்தின் அடையாளம். இராமன் தூயன்.இராவணன் தீயன். இராமனுக்கு வெற்றி. இராவணனுக்கு அழிவு. அப்படியெனில், வைணவம் வென்றது. சைவம் வீழ்ந்தது” என தெரிவித்துள்ளார்

ராஜராஜ சோழனை இந்துவாக்க முயற்சிக்கிறார்கள் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்தது பெரும் விவாதமாக மாறியுள்ளது. நடிகர் கமல்ஹாசனும், “ராஜராஜசோழன் காலத்தில் இந்து என்பதே இல்லை” என தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் நேற்று, “ இந்து சமய அறநிலையத் துறையை சைவ சமய அறநிலையத் துறை என்றும், வைணவ சமய அறநிலையத் துறை என்றும் பிரித்திட வேண்டும். இவ்விரு சமயங்களையும் இந்து சமயம் என்று ஆக்கியதன் மூலம் அவற்றின் அடிப்படைக் கோட்பாடுகள் நீர்த்துப்போகின்றன. அதாவது, சிவனியம், மாலியம் ஆகியவற்றை வைதிக மத கோட்பாடான சனாதனம் விழுங்கிவிட்டு மேலாதிக்கம் செய்கிறது. சனாதனம் வர்ணாஸ்ரமம் மனுதர்மம் என்பன பார்ப்பனியமே” என்று திருமாவளவன் தெரிவித்திருந்தார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in