‘இந்துக்களின் பாதுகாப்புக்காகவே மனுஸ்மிருதி புத்தகங்களை இலவசமாகக் கொடுக்கிறோம்’ - தகிக்கும் திருமாவளவன்!

‘இந்துக்களின் பாதுகாப்புக்காகவே மனுஸ்மிருதி புத்தகங்களை இலவசமாகக் கொடுக்கிறோம்’ - தகிக்கும் திருமாவளவன்!

இந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்துக்களின் நலன் கருதியே அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக மனுஸ்மிருதி புத்தகத்தை விலையில்லாமல் வழங்குகிறோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் முன்னுரை எழுதிய மனுஸ்மிருதி பிரதிகளை விசிக கட்சியினர் தமிழகம் முழுவதும் கொடுத்து வருகிறார்கள். சென்னை கோயம்பேட்டில் மனுஸ்மிருதி பிரதிகளை விசித தலைவர் திருமாவளவன் மக்களுக்கு இலவசமாக அளித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “ ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு என்று ஒரு தனி அலுவலகம் இல்லை. ஒரு அடையாளம் இல்லை. கிட்டத்தட்ட ஒரு தலைமறைவு இயக்கத்தைப் போல, பயங்கரவாத பாசிச அமைப்பாக ஆர்எஸ்எஸ் இயங்குகிறது என்பதை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தி இருக்கிறோம்.

50 இடங்களில் பேரணி நடத்த அவர்கள் விண்ணப்பம் செய்தார்கள். ஆனால் அவர்களால் பொறுப்பாளர்கள், முகவரி, இருப்பிடம் போன்ற ஆதாரங்களைக் கொடுக்க முடியவில்லை. எனவே நாங்கள் இந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்துக்களின் நலன் கருதி அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதாகவே இந்தப் புத்தகத்தை விலையில்லாமல் வழங்குகிறோம். இந்த எழுச்சியை அம்பேத்கர் அவர்கள் 1927ம் ஆண்டு டிசம்பர் 25ம் நாள் மனுஸ்மிருதி புத்தகத்தை எரித்து உருவாக்கினார்.” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in