மக்களவைத் தேர்தலில் பானை சின்னத்தில்தான் போட்டியிடுவோம்... திருமாவளவன் உறுதி!

திருமாவளவன்
திருமாவளவன்
Updated on
2 min read

மக்களவைத் தேர்தலில் விசிக வேட்பாளர்கள் பானை சின்னத்தில்தான் போட்டியிடுவார்கள். எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பதில் எந்த ஊசலாட்டமும் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருச்சி  விசிக மாநாடு
திருச்சி விசிக மாநாடு

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக போட்டியிடுகிறது. எத்தனை தொகுதிகள் மற்றும் எந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இதுவரையில் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. அதேபோன்று, கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுடனும் திமுக பேசி வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளன், தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். "திருச்சியில் நடந்த விசிக மாநாட்டின் நோக்கத்திற்கும், திமுகவோடு நடத்துகிற தொகுதி பேச்சுவார்த்தைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மாநாடு நடத்தவில்லை என்றாலும் கூட 4 தொகுதிகளைத்தான் கேட்டு இருப்போம். பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒரு யுக்தியாக மாநாட்டை கருதவில்லை. அந்த எண்ணத்தில் நாங்கள் மாநாட்டை ஒருங்கிணைக்கவில்லை. அதுவேறு.. இதுவேறு.

ஸ்டாலின் உடன் திருமாவளவன்
ஸ்டாலின் உடன் திருமாவளவன்

ஒவ்வொரு தேர்தலிலும் 4 அல்லது 5 தொகுதிகளை கேட்டு வருகிறோம். திமுக கூட்டணியில் பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்ல வேண்டிய கடமை திமுகவிற்கு இருக்கிறது. நெருக்கடியும் இருக்கிறது. யாரையும் விட்டுவிடக்கூடாது என்பதற்காக யுக்திகளை கையாளுகிறார்கள். நாங்கள் 3 தனித்தொகுதி, ஒரு பொதுத்தொகுதியை கேட்டு இருக்கிறோம். 2001 முதல் ஒவ்வொரு தேர்தலிலும் பொதுத்தொகுதியை கேட்டு வருகிறோம். நாங்கள் பொதுத்தொகுதியை கேட்பது புதிய அணுகுமுறை அல்ல. எத்தனை தொகுதிகள் என்பதை விரைவில் பேச்சுவார்த்தையில் உறுதி செய்வோம்.

சின்னத்தை பொறுத்தவரையில் இந்தத் தேர்தலில் பிரச்சினை இருக்காது. ஏற்கெனவே சட்டமன்ற தேர்தலில் விசிக வேட்பாளர்கள், பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 பேர் வெற்றிப் பெற்றிருக்கிறார்கள். அதில் எந்த ஊசலாட்டமும் இல்லை. பாஜக தலைமையிலான கூட்டணியின் தமிழக வாக்கு வங்கி துவங்கவில்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பாஜகவின் வாக்கு சதவீதம் பூஜ்ஜியம்தான்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் திட்டம்: நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்க இஸ்ரோ அழைப்பு!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ரூ.13,720 கோடி; கோவையில் கலைஞர் நூலகம்: பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு!

தஞ்சையில் ரூ.120கோடியில் சிப்காட்; ரூ.2483 கோடியில் விருதுநகர், சேலத்தில் ஜவுளிப் பூங்கா: பட்ஜெட்டில் அறிவிப்பு!

பயங்கரம்... பழங்குடி சமூகத்தினர் இடையே நடந்த மோதலில் 64 பேர் சுட்டுக்கொலை!

பகீர்... நடுரோட்டில் மனைவியை வழிமறித்து தீ வைத்த கணவன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in