திருமகன் ஈவெரா எம்எல்ஏ மாரடைப்பால் மரணம்: காங்கிரஸார் அதிர்ச்சி

திருமகன் ஈவெரா எம்எல்ஏ
திருமகன் ஈவெரா எம்எல்ஏ

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனான திருமகன் ஈவெரா, உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். 2021 சட்டப்பேரவை தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈவெராவிற்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். திருமகன் திடீர் உயிரிழப்பு காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in